மேகலயா மாநிலத்தில் பிர்னைலின் கார்சின்டிவ் என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாலிபருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த வாலிபரின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததோடு பழகுவதையும் நிறுத்தினார். அந்த வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணிடம் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்திய நிலையிலும் அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர் தன்னுடைய தோழியை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 30ஆம் தேதி தன் தந்தையுடன் அந்த இளம் பெண் மார்க்கெட்டுக்கு சென்றபோது அங்கு சென்று வாலிபர் தகராறில் ஈடுபட்டார். கண்ணிமைக்கும் நொடியில் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து அவர் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் பொதுமக்கள் பிடித்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தன் மகளை மீட்டு தந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.