தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் என இருபாலரும் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகள் பயிற்சிக்கு முதல் ஆண்டு 350 ரூபாய், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு 325 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் மாதந்தோறும் மாணவர்களுக்கு நான் ஒரு ரூபாய் கல்வி உதவி தொகையும் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மாணவர்கள் 9442572948  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.