சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டார். இவர் பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடிகர். அந்த நிகழ்ச்சியின் போது இவர் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக கிண்டல் அடித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச அளவில் சிக்சர் அடித்து வருகிறார். அப்படி இருக்கையில் உள்ளூர் ரப்பர் பந்தில் சிக்ஸர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து நாங்கள் ஒருபோதும் அச்சப்பட மாட்டோம் என்றார். அதன் பிறகு ஒரு குழந்தை பிறந்ததுமே பாம்பை கையில் எடுத்து விளையாடுதாம். பாம்பு போட்டுச்சுன்னா வாயில் நுரை வந்து ப்ரோ.

ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சென்று தந்தை எங்கே என்று கேட்டால் அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள். ஒரு குழந்தை படிப்படியாக பிறந்து வளர்ந்து உலகைப் பற்றி அறிய வேண்டுமே தவிர பிறந்தவுடன் பேசிவிட்டால் பேய் தான் பிறந்து விட்டதாக குடும்பத்தினர் அஞ்சுவார்கள். ஒரு குழந்தை வளர்வதற்கு இத்தனை நாட்கள் ஆகும் போது ஒரு கட்சி தொடங்கிய உடனே 2 வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொன்னால் நக்கலா என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் திமுக தான் தன்னுடைய முதல் எதிரி  என்று அவர்அறிவித்தார். அதோடு சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் திமுகவுக்கு எதிராக சில தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில் தற்போது திமுகவுக்கு ஆதரவு கொடுத்து விஜயை திண்டுக்கல் லியோனி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.