திமுக கூட்டணியில் மதிமுக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இறுதியாக கேட்ட நிலையில், திமுக ஒரு மக்களவை தொகுதி மட்டுமே தருவோம் என திட்டவட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், திமுக நிர்பந்தித்தாலும் ஒப்புக்கொள்ள முடியாது என மதிமுகவும் விடாப்பிடியாக உள்ளது. இதனால், திமுக – மதிமுக இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.