தமிழ் சினிமாவில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் போன்ற சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய உதடு பெரிதாக ஆப்ரேஷன் செய்துள்ளார்.

இது தொடர்பாக சமீப காலமாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதற்கு ரேஷ்மா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இது என்னுடைய உதடு. அது எப்படி இருக்க வேண்டும் என்று நான் தான் முடிவு செய்ய வேண்டும். என் உதடு இப்படி இருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்காக உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியுள்ளார்.