பிரபல பிரெஞ்சு மந்திரவாதியான சேவியர் மார்டிமர், ஒரு வணிக வளாகத்தில் (Shopping Mall) பொதுமக்களைப் போல சாதாரணமாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவருக்கு ஒரு மேஜிக் சவாலை விடுத்துள்ளார்.

அந்த சவாலை உடனடியாக ஏற்றுக் கொண்ட சேவியர், தான் தள்ளிக்கொண்டு வந்த ஷாப்பிங் வண்டியை (Shopping Trolley) வேகமாக தள்ளி ஓடி, அடுத்த விநாடியே சூப்பர்மேன் போல காற்றில் மிதக்கத் தொடங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Seany (@seandoesmagic)

எந்தவொரு கயிறோ அல்லது கம்பிகளின் உதவியோ இல்லாமல், பொதுமக்கள் மத்தியில் அவர் காற்றில் மிதந்தபடியே ஷாப்பிங் செய்த இந்த விநோதமான காட்சி, அங்குள்ளவர்களைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுக்க வைத்துள்ளது.

@seandoesmagic என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இந்த வீடியோ, மேஜிக் உலகையே வியப்பில் ஆழ்த்தி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.