தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஜனவரி 29-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய விவாதம் வெடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட இந்த விருதுப் பட்டியலில் பல திறமையான கலைஞர்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னணி இயக்குநர் பா. இரஞ்சித் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் எழுப்பியுள்ள கேள்வி, ஒட்டுமொத்த விருது வழங்கும் முறையையே ஒரு நிமிடம் யோசிக்க வைத்துள்ளது. “அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாகச் செயல்படுகிறதா?” என அவர் நேரடியாகக் கேட்டுள்ளது, விருதுப் பட்டியலில் ஏதோ ஒரு ‘பார்ஷியாலிட்டி’ இருப்பதாக அவர் கருதுவதையே காட்டுகிறது.
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
— pa.ranjith (@beemji) January 30, 2026
விருதுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இரஞ்சித் போட்ட இந்த பதிவு, இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக, சமூக ரீதியான கருத்துக்களைத் துணிச்சலாகப் பேசும் இவரது படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரது ரசிகர்களிடமும் தெரிகிறது. ஒரு பக்கம் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும், இன்னொரு பக்கம் இரஞ்சித்தின் இந்த ‘நேர்மை’ குறித்த கேள்வி, திரைத்துறையில் இருக்கும் உள்ளரசியலை வெளிச்சம் போட்டுப் காட்டுவதாகப் பேசப்படுகிறது. 2026-ன் தொடக்கத்திலேயே சினிமா விருதுகளைச் சுற்றி ஒரு காரசாரமான அரசியல் போர் ஆரம்பமாகிவிட்டது!
