நமது அன்றாட உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் அப்பளம், எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், அப்பளம் செய்வதற்கான மாவைச் சுத்தமில்லாத தரையில், தொழிலாளர்கள் தங்கள் கால்களால் மிதித்துத் தயார் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. நாம் விரும்பிச் சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இவ்வளவு அசுத்தமான சூழலில் உருவாவதைக் கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Foot powered Indian snack pic.twitter.com/t9lDkRFKdK
— Codex_Indîa (@Codex_India6) December 30, 2025
இந்தக் காணொளி தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது போன்ற இடங்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய தயாரிப்பு நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இனி அப்பளம் வாங்கும்போதே ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
