பொதுவாகவே நாம் அனைவரும் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை செய்வோம். அது சில நேரங்களில் நம் உடல் நலத்திற்கு ஆபத்தாகவும் மாறக்கூடும். உணவு சாப்பிட்டு முடித்ததும் குட்டி தூக்கம் போடுவது, டீ மற்றும் காபி குடிப்பது என சில பழக்கங்கள் நம்மிடம் உள்ளது. இதனால் செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உடலில் ஏற்படக்கூடும்.

இதனை தவிர்ப்பதற்கு சாப்பிட்டதும் தண்ணீர் பருக கூடாது. உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். பெல்டை தகர்த்தக் கூடாது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் கூடாது. இது பத்து மடங்கு கூடுதல் தீங்கு விளைவிக்கும். எனவே சாப்பிட்டு முடித்ததும் ஒரு வாக்கிங் சென்று விட்டு வரலாம்.