பாதாம் விலை அதிகம் என்று நினைப்பவர்கள் அதில் உள்ள நன்மைகளை பார்க்க தவறுகின்றனர். பாதாமில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. விட்டமின் பி2, விட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளது.

பாதாமை அப்படியே சாப்பிடுவதைவிட நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் அதன் நன்மைகள் அதிக அளவு கிடைக்கப்பெறும். 4 அல்லது 5 பாதாம்களை இரவு தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாதாமை தோலை உரித்து சாப்பிட வேண்டும்

  • ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். இது செரிமானத்திற்கு உதவும்.
  • பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது நாம் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளும் நீங்கிவிடும்.
  • விட்டமின் ஈ அதிக அளவு நிறைந்துள்ளதால் முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் பொலிவாகும்.
  • நீரில் ஊற வைத்த பாதாம்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள இறந்த செல்களிடமிருந்து நம்மை காக்கும்.
  • பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது.
  • ஊற வைத்த பாதம் சாப்பிடுவதால் மூளையின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்.
  • ஊற வைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதோடு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.