
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன பெட்டி உள்ளது. அதில் உணவுப் பொருட்களை அதிக நாட்கள் வைத்து சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அப்படி செய்வது உடல் நலத்திற்கு பெரிய தீங்கை ஏற்படுத்தும். குறிப்பாக காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய சாலட்களை இரண்டு நாட்களுக்கு கூடுதலாக ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். வெளியில் எடுத்ததும் அதனை உடனே சாப்பிட்டு விட வேண்டும். ஃப்ரீஸ் செய்து அதனை சாப்பிடக்கூடாது.
பிரட் போன்ற தின்பண்டங்களையும் வைக்கக் கூடாது. அதனை வெளியில் வைத்து காலாவதி தேதிக்கு முன்பாக சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் முட்டைகளை மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை வைக்கலாம். அதுவே உடைத்து வைக்கப்பட்ட முட்டை என்றால் அதனை இரண்டு நாட்களுக்குள் சமைத்து விட வேண்டும். அதனைப் போலவே கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் பலா ஆகியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் சமைத்து சாப்பிட்டு விட வேண்டும். பல வாரங்களாக குளிர்சாதன பெட்டியில் இவற்றை வைக்கக் கூடாது.