‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன், நடிகர் அருண் விஜய்யின் 36ஆவது படத்தை இயக்கவுள்ளார். சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இரண்டு அருண் விஜய்யும் நிர்வாணமாக ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார்.