
SBI வங்கியானது இந்திய வங்கிக் கிளையில் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஊழியர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ளதாக புகைப்படம் எடுத்து நபர் ஒருவர் தன்னுடைய X தளத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த SBI நிர்வாகம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் வருந்துகிறோம்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கி வளாகத்திற்குள் புகைப்படமோ அல்லது வீடியோகிராஃபியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவை தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே, சமூக வலைதளத்தில் இருந்து புகைப்படத்தை உடனே நீக்குங்கள் என அந்த நபரினுடைய புகாருக்கு பதிலளித்துள்ளது.