டெல்லியின் துவாரகா பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக வீட்டில் இருந்துள்ள நிலையில், திடீரென மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி அச்சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி மர்ம நபர் சொல்வதைக் கேட்டு அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அவருடன் சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்து கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அவருடைய கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.