கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் பைரம்பாடா கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஜா தர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விராஜ்பேட்டை தாலுகாவின் மூர்நாடுவில் உள்ள காந்திநகரில் தம்பதியினர் தங்களது வாழ்க்கையை தொடங்கினர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அக்டோபர் 13-ஆம் தேதி இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. குடும்ப தகராறு கட்டுக்கடங்காத நிலையில், ஸ்ரீஜா தனது கணவனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவத்தில் தர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ஸ்ரீஜாவை கைது செய்தனர்.