பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கல்கி 2898 ஏடி‌ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தற்போது தமிழில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திஷா பதானி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவர் தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். அவர் அணிந்திருந்த உடையின் விலை ரூ.68,000 ஆகும். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)