
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் வீடுகளில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் குளிர்சாதன பெட்டி. அதிகபட்ச நன்மைகளை பெற்றுக் கொள்ள உதவும் இதில் மறைக்கப்பட்ட பட்டனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் உணவுகள் வைத்தால் கெட்டுப் போவதாகவும் அதிக நேரம் கெடாமல் இருப்பதில்லை என்றும் பலரும் கூறிவரும் நிலையில் அந்த ரகசிய பட்டன் சிக்கலை தீர்க்கும். இதனை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
பிரிட்ஜில் இருக்கக்கூடிய வெப்பநிலை பட்டனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த பட்டனானது பொதுவாக பூஜ்ஜியத்தில் இருந்து ஐந்து வரையிலான எண்கள் எழுதப்பட்டிருக்கும். மக்கள் பலரும் இதனை டிகிரி செல்சியஸ் உடன் தொடர்பு படுத்துகிறார்கள். ஆனால் இது உங்கள் குளிர்சாதனைப் பெட்டியில் திறனை காட்டுகின்றது. உணவு தரநிலை ஏஜென்சியின் கூற்றுப்படி குளிர்சாதன பெட்டியை 5 செல்சியஸுக்கும் குறைவாக வைக்க வேண்டும்.
ஏனென்றால் 8 செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை பாக்டீரியாக்கள் வேகமாக வளர வழி வகுப்பதுடன் உணவும் சீக்கிரமாக கெட்டுப் போகும். அதனால் அதில் கொடுத்திருக்கும் கையெட்டை பார்த்து வெப்பநிலையை அமைப்பது நல்லது. இதனை சரிபார்க்க ஒரு தெர்மாமீட்டர் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரை நடுத்தர அலமாரியில் இரவு முழுவதும் வைத்துப் பார்த்தால் சரியான வெப்பநிலை நன்றாக தெரியும். சமைத்த உணவை மேல அலமாரியில் வைக்க வேண்டும் மற்றும் பச்சை இறைச்சியை கீழே வைக்கலாம். பழங்கள் மட்டும் காய்கறிகளை வெவ்வேறு இடங்களில் ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லது.