
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர் விஜயை மறைமுகமாக சாடுவதாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
அதாவது முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சோசியல் மீடியாவில் புகுந்து விளையாடுவதை குறிப்பிட்டு அவர்களை virtual warriors என்று பாராட்டியிருந்தார். இதனை மனதில் வைத்து தான் முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது இனி அமைச்சர்கள் சென்னையில் அதிக நேரத்தை செலவிடக்கூடாது. உங்கள் மாவட்டத்திற்கு சென்று அதிக நேரத்தை செலவிடுங்கள். தேர்தல் வர இருப்பதால் அமைச்சர்கள் கவனத்துடன் பேச வேண்டும்.
அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தலைமை தான் வேட்பாளர்களை தேர்வு செய்யும். தலைமை யாரை வேட்பாளராக தேர்வு செய்கிறதோ அவர்களை வெற்றி பெற வைக்க நீங்கள் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள் என்று விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து திமுக மற்றும் பாஜகவை விமர்சனம் செய்து வரும் நிலையில் அடுத்து வரும் தேர்தலில் அவருடைய அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.