இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். காலையில் கண்விழிப்பது முதல் இரவு படுக்கைக்கு சென்று தூங்குவதற்கு முன்பு வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். இப்படி தினமும் பயன்படுத்தும் செல்போனை எப்போது நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மொபைல் போன் திரையை அழுக்கு, தூசி மற்றும் கறைகள் இல்லாமல் பாதுகாப்பது அவசியம். அதற்கு மொபைல் போன் திரையை மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்தி சுத்தம் செய்வதால் கீறல் விழாமல் கைரேகைகளையும் கூட சிறப்பாக சுத்தம் செய்ய முடியும்.

மொபைல் போன் திரையில் விழும் கோடுகளை தவிர்ப்பதற்கு காய்ச்சி தண்ணீரை குறைவாக பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். கடுமையான அழுக்கு மற்றும் கிருமி நாசினிக்கு 70% ஐசோ பிரைல் ஆல்கஹால் கரைசலை குறைவாக பயன்படுத்தலாம். ப்ளீஸ் மற்றும் பிற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது போன்ற ரசாயனத்தை பயன்படுத்தினால் ஸ்கிரீன் பாதிக்கப்படும். எப்போதும் மொபைலை சுத்தம் செய்வதற்கு முன்பு ஸ்கிரீனை ஆப் செய்துவிட்டு சுத்தம் செய்வது நல்லது. தூசி மற்றும் கரைகளை அகற்றுவதற்கு உலர்ந்த மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்தி துடைக்கலாம்.

மொபைல் கேசை கழற்றிவிட்டு சுத்தம் செய்ய வேண்டும். மீண்டும் பிறையை ஆன் செய்வதற்கு முன்பு முழுமையாக உணர வைக்க வேண்டும். போனின் திரையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக மொபைல் போன் திரையை சுத்தம் செய்யும் போது திரையில் நேரடியாக திரவங்களை தெளிக்கவும் அல்லது ஊற்றவோ கூடாது. மேலும் ப்ளீச் மற்றும் விண்டோ கிளீனர் அல்லது பாத்திர சோப்பு போன்ற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது.