இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடலின் ஆழத்தை கண்டறிய நவீன கருவிகள் இல்லை. இதனால் நீளமான கயிறை, சங்கிலியை கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி பழமையான முறையை வைத்து ஆழம் கண்டறிந்தனர். இதுவரை கடலின் அடிமட்டம் குறித்து யாரும் அறியவில்லை.

ஆழ்கடல் பகுதி ஒளி இல்லாமல் இருட்டாக இருக்கும். ஆழ்கடலிலும் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், இருக்கிறது. கடலுக்கு அடியில் செங்குத்தான மலைகள் அமைந்துள்ளது. அதன்படி அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் கடலடி மலைகளின் உச்சிகளே ஆகும். கடலுக்கு அடியில் பத்தாயிரம் மைல் நீளத்திற்கு மலைகளும் 300 அடி ஆழத்திற்கு கடல் அடி ஆறுகளும் அமைந்துள்ளது.

இதுவரை கடலின் அடிமட்ட ஆழம் என்பது தெரியவில்லை. பிலிப்பைன்ஸ்க்கு கிழக்கே இருக்கும் மின்டானாவோ அகழியில் குக்மடு என்ற இடம் தான் கடல்களில் மிக ஆழமான பகுதியாகும். அதனடி 37,782 என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குக் மனு என்ற இடத்தில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் சிகரம் மூழ்கி அதற்கு மேல் பல ஆயிரம் அடிக்கு தண்ணீர் நிற்குமாம். ஏனென்றால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29 ஆயிரத்து 29 அடிதான்.