பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது பூமி சுமார் 1674 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு நொடி பூமி சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்னவாகும் என்று தெரியுமா? 1674 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பூமி ஒரு நொடி தனது சுழற்சியை நிறுத்திவிட்டால் அனைத்து மனிதர்களும் வேகமாக தூக்கி வீசப்படுவார்கள். நாம் வீட்டிற்குள் இருந்தாலும் தப்பிக்க முடியாது. பூமி சுழற்சியை நிறுத்தும்போது நிலத்தில் ஏற்படும் பாதிப்பினால் வீடு கூட தூக்கி எறியப்படலாம்.

பூமி ஒரு நொடி சுழற்சியை நிறுத்தினால் அடுத்த சில நொடிகளுக்குள் உலகில் இருக்கும் 99 சதவீத உயிர்கள் பலியாகிவிடும். அது மட்டும் இல்லாமல் கடல் சீற்றம், சுனாமி, நிலநடுக்கம் கூட ஏற்படும். இதனால் ஒரு உயிர் கூட பூமியில் வாழ்வதற்கு வாய்ப்புகள் இல்லை. சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் பூமி நின்றால் வருடத்தில் ஆறு மாதங்கள் இருளிலும், மீதமுள்ள ஆறு மாதங்கள் ஒளியிலும் இருக்கும். இதனால் இருளில் இருக்கும் ஆறு மாதங்கள் பனி பிரதேசமாகவும், ஒளியில் இருக்கும் ஆறு மாதங்கள் பாலைவனமாகவும் மாறிவிடும்.