ஆஸ்திரேலியா பாய்ச்சல் வீரரான பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் மிகவும் புகழ் பெற்றவர். இவர் 7 வருட கடும் பயிற்சிக்கு பிறகு விண்வெளியில் இருந்து தரையை நோக்கி குதித்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் விண்வெளியில் இருந்து பூமிக்கு குதித்தார்.

விண்வெளியில் இருந்து குதித்த சில நொடிகளில் பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் மதிப்பிடப்பட்ட அதிகபட்ச வேகமான 1,357 கிலோமீட்டர் வேகத்தில் கீழே பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகம். பெலிக்ஸ் பௌக்மார்ட்னர் தனது உலக சாதனையை தொடங்கிய இடத்தில் இருந்து பூமிக்கு வர 4 நிமிடம் 22 நொடிகள் ஆகியுள்ளது. அவர்  பாராசூட்டின் உதவியுடன் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் பத்திரமாக திரையரங்கி உலக சாதனை படைத்தார்.