சாம்சங் நிறுவனத்தின் சில கேலக்ஸி S சீரிஸ் போன்களில் பச்சை நிறத்தில் கோடு வருகின்றது. கேலக்ஸி S20 சீரிஸ், கேலக்ஸி S21 சீரிஸ் மற்றும் எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு முறை இலவசமாக ஸ்கிரீனை மாற்றி தருவதாக samsung நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் நிறுவன போன்களில் சமீபகாலமாக பச்சை நிறத்தில் கோடுகள் தோன்றுவதால் அதிகம் புகார்கள் வந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் மூலமாக பிரச்சினை வருவதாக தெரியவந்துள்ளது. இதனை இலவசமாக மாற்றிக் கொள்வதற்கு இந்திய வாடிக்கையாளர்களுக்கு samsung நிறுவனம் முன் வந்துள்ளது. தகுதியான சாம்சங் மொபைலில் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள சில நிபதனைகள் உள்ளது.

அதாவது மொபைல் வாங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால் கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மொபைல் கீழே விழுந்து சேதம் அடைந்திருந்தால் அல்லது தண்ணீரால் பாதிக்கப்பட்டிருந்தால் இலவச ஸ்கிரீன் மாற்றுவதற்கு ஏற்றுக்கொள்ளப்படாது. சாம்சங் குறிப்பிடப்பட்டுள்ள மாடல்கள் மட்டும் அல்லாமல் மற்ற சில மாடல்களும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை எதுவும் வழங்கப்படவில்லை.