உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் போட்டியை சமாளிப்பதற்காக whatsapp சேனல்கள் என்ற புதிய வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய அம்சம் இந்தியாவைத் தவிர பல நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த அம்சத்தின் உதவியுடன் பிரபலங்கள் முதல் பல பிரபலமான நிறுவனங்கள் வரை வாட்ஸாப் சேனல்களை உருவாக்க முடியும்.

இந்த சேனல்களின் உதவியுடன் அவர்கள் தங்களது பார்வைகளை மட்டுமல்ல தங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்தலாம். இதனால் இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றது. இருந்தாலும் இந்த அம்சம் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட அரட்டைகள் நடக்கும் இடமாக இந்த சேனல்கள் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp சேனல்களால் எரிச்சல் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வாட்ஸப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதாவது சேனல் வசதியில் சிக்கலில் உள்ளவர்களுக்கு இந்த வசதியை மறைப்பதற்கு whatsapp வாய்ப்பு வழங்குகிறது. அதன்படி வாட்ஸ் அப் சேனல்கள் அம்சத்தை மறைப்பதற்கு முதலில் வாட்ஸ் அப்பிற்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு புதுப்பிப்புகள் விருப்பத்திற்கு சென்று சேனல்களை பார்க்க கீழே உருட்டவும். ஆனால் உங்கள் வாட்ஸ் அப்பில் போதுமான நிலைகள் இருந்தால் சேனல்கள் தானாகவே மறைந்து விடும். இதனால் உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது. இருந்தாலும் சேனல்கள் தோன்றும் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் அப்பை மீண்டும் திறக்க வேண்டும்.

இதுவும் தலைவலியாக இருப்பதால் சேனல்களை நிரந்தரமாக மறைப்பதற்கு விருப்பம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்த நிலையில் வாட்ஸ்அப் சேனல்களை மறைக்க மற்றொரு வழி உள்ளது. அதாவது வாட்ஸ் அப்பை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்காவிட்டாலும் சேனல்கள் உங்களது ஃபோனில் தோன்றாது. பழைய பதிப்பை பயன்படுத்துவதன் மூலமாக சேனல்கள் முரண்படாமல் இருக்கலாம். சேட்களை காப்பு பிரதி எடுத்து புதிய பதிப்பிற்கு பதிலாக வாட்ஸ் அப்பின் பழைய பதிப்பை மீண்டும் நிறுவலாம். இவ்வாறு செய்தால் whatsapp சேனல்களை நீங்கள் மறைக்க முடியும்.