தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,  இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் கூறியதாவது மாண்புமிகு மோடி அவர்களே.. பெயர் சொல்லவில்லை என்று கேட்கிறீர்கள்?

உங்கள் பெயரை உச்சரிப்பதில் எனக்கு என்ன பயம்? ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி. ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. மகளிருக்கு எதிரான வன்கொடுமையை சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று சொல்வதாக கூறுகிறீர்கள். திமுக ஆட்சிக்கு அரசியலுக்கும் என் சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்.