இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் கார்டு  விளங்கி வருகிறது. கணக்கு தொடங்குவதிலிருந்து   அரசு சலுகை பெறுவது வரைக்கும் முக்கிய  ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்த ஆதார் கார்டு  தொலைந்து  போனால்  எவ்வாறு புதிய ஆதார் கடை பெறுவது? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அதாவது ஆதார் எண், பதிவு ஐடி, ஆதார் மெய்நிகர் ஐடி அல்லது ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் மூலமாக மீண்டும் பெறுவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆவணம் அனுமதி அளித்துள்ளது.

UIDAI இணையதளமான myaadhaar.uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு சென்று டவுன்லோட் என்ற பக்கத்தை கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் கேப்சா குறியீட்டை பதிவிடவும். அதன் பிறகு பதிவு செய்யப்பட செல்போன் எண்ணுக்கு OTP வரும் அதை பதிவு செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். பின் இ-ஆதாரை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.