உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியின் முதல்வராக பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இது தொடர்பாக பள்ளி முதல்வருக்கும் அந்த ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது திடீரென்று பள்ளி முதல்வர் கஞ்சன் சவுத்ரியை தாக்கியுள்ளார். உடனே அந்த ஆசிரியை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்தார். அப்போது பள்ளி முதல்வர் அவருடைய ஆடையை பிடித்தார். இப்படி மாறி மாறி இருவரும் சண்டையிட்டுக் கொள்ள சக ஆசிரியர்கள் இருவரையும் பிரித்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.