உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருட நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்கரனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. அதோட அந்நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது.

இதற்கிடையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஏற்கனவே நான்கு டாங்கிகளை போலந்து பிரதமர் மெடூசி மொரவிஹி அளித்துள்ளார். அதோடு அவர் தற்போது ஆயுதங்களையும் விரைவில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ டாங்கிகளை வழங்கிய போலந்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டிற்கு துர்ஷா பைப் லைன் வழியாக விநியோகிக்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் போலந்து நாட்டில் கச்சா எண்ணெயின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.