உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், மனிதாபிமான அற்ற முறையில் விலங்கு கொடுமைபடுத்தப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இரு இளைஞர்கள், தெரு நாயின்  கால்களை கயிற்றால் கட்டி, அதன் மற்றொரு முனையை தங்கள் மோட்டார் சைக்கிளில் இணைத்து சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்கள்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலான நிலையில், வலியால் அலறும் நாயை சாலையில் இழுத்துச் செல்லும் காட்சியிலும், அருகில் உள்ள மற்றொரு நாய் அந்த இருவரையும் துரத்தும் காட்சிகளும் காணப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் எவரும் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

“>

இந்த கொடுமையான செயலைக் கண்டித்து ‘ விலங்கு நல அமைப்பு, சம்பந்தப்பட்ட இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அலிகார் காவல்துறை அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிலளித்து, “இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை நிலையம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளது.

சமூகத்தில் விலங்குகள் மீதான அக்கறை குறைந்து வருவதாகவும், இப்படியான சம்பவங்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.