தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார். “எங்கள் இனம் அழியும் போது திமுக, அதிமுக அரசுகள் வேடிக்கை மட்டுமே பார்த்தன” என்று அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​”சீமான் வாக்கு வாங்குவதற்காக மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினையைப் பேசினார், ஆனால் விஜய்யின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை” என்றும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர் விவகாரத்தில் திமுக, அதிமுக மற்றும் சீமானை விமர்சித்து, விஜய்க்கு ஆதரவாக இலங்கை எம்.பி பேசியுள்ள இந்த விஷயம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.