ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மாவட்ட கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ வாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈ.வி.கே.எஸ் மறைவை தொடர்ந்து பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தே.மு.தி.க சார்பாக ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக ஈ.பி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அ.தி.மு.க கூட்டணி சார்பாக யார் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.