திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வேட்பு மனுதாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. 121 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 11 மணி முதல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை என்பது நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ள பிரதான கட்சிகளான திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு,  தேமுதிக வேட்பாளர் ஆனந்த்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுடைய வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

121 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்..

அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24, மற்றும் 25ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் வாக்கு சேகரிக்கிறார்.. அதன்படி 24 ஆம் தேதி வெட்டுக்காடு வலசு, நாச்சாயி டீக்கடை, சம்பத் நகர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பரப்பரை மேற்கொள்கிறார்.. மேலும் 25 ஆம் தேதி ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால் ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்கிறார்..

ஈரோடு சட்டமன்ற கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்..