அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2 ஆம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் மாணவிகளுக்கான உதவித் தொகையை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்,.8) வழங்குகிறார்.

திருவள்ளூரில் 2-ம் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “புதுமைப் பெண் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது என தெரிவித்தார். நாடு செழித்து தன்னிறைவுடன் இருப்பதற்கு கல்வி மிகவும் அவசியம். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவானது தான் திராவிட இயக்கம். கலைஞர் இட்ட ஒரு கையெழுத்தால் லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்து மாறியது” என்றார்.