ஆவடியில் சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் ஸ்ரீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதி. இந்த தம்பதியருக்கு 9 வயதில் டான்யா என்ற மகள் உள்ளார். டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அவரது பெற்றோர் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு முதல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த பாதிப்பு என்பது குறையாமல் இருந்தது. தொடர்ந்து தனது சக்திக்கு மீறி கடன் வாங்கி குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சிகிச்சை மேற்கொண்டும் நாளுக்கு நாள் குழந்தையின் கன்னம் என்பது பாதிக்கப்பட்டு தொடர்ந்து ஒரு பக்கம் முக சிதைவு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தான் பெற்றோர் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியதன் அந்த அடிப்படையில் சென்னையில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் குழந்தை டான்யாவுக்கு  அடுத்தடுத்து 2 கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில் சென்னை பட்டாபிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின், தொடர்ந்து ஆவடியில் இருக்கக்கூடிய குழந்தை டான்யா வீட்டுக்கு நேரில் சென்று உடல்நிலை குறித்து நேரில் நலம் விசாரித்து சென்றார் .