ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு 2 கிலோ கறி, ரூபாய்.5000 வரை பணம் கொடுப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். தொகுதியில் பணம் விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் திமுகவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது பற்றி பாஜக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. எனினும் இதுவரையிலும் நடவடிக்கை இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கான புகாரில் அவர் குற்றம் சாட்டினார்.