தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சேலம் அதிநவீன மருத்துவமனையில் உள்ள கட்டண படுக்கை வசதியை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சேலம், மதுரை, கோவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போன்று கட்டண படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 1.25 கோடி செலவில் 10 கட்டண படுக்கை வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளை விட அதிக வசதி கொண்டவை.

அதன் பிறகு டீலக்ஸ் பிரிவுக்கு ரூ. 2000 மற்றும் சாதாரண பிரிவுக்கு ரூ. 1200 கட்டணமாக வசூலிக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் பணியாற்ற வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அந்த வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தேவையான பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும் படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.