தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 7,301 பணியிடங்களை நிரப்புவதற்குரிய குரூப்-4 தேர்வு கடந்த வருடம் ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரையிலும் வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 7,301 பணியிடங்களுக்கு 18 லட்சம் தேர்வர்கள் எழுதிய தேர்வு முடிவை வெளியிடாமல் இழுத்தடித்து வருவதால் தேர்வர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய காலதாமதம் செயற்கையாக செய்யப்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் எழுப்பி உள்ளார்.