அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரி டக்ளஸ் மெக்ரிகோர், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “ஈரான் வான்பரப்பில் சீனா மற்றும் ரஷ்யாவின் செயற்கைக்கோள் உதவியுடன், ஈரான் மிகத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்களும், துறைமுகங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் அமெரிக்கா இப்போது இந்தியத் துறைமுகங்களின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

​இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவத் தலைமை இந்தத் தகவலை மறுத்துள்ளனர். “ஈரானின் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பை நாங்கள் சிதைத்துவிட்டோம். எங்கள் தளங்கள் பாதுகாப்பாகவே உள்ளன” என்று அவர்கள் கூறுகின்றனர்.