ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் எங்கு பார்த்தாலும் ஏவுகணைத் தாக்குதல்களும் போர் விமானங்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஈரானின் ஒரு பகுதியில் மட்டும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு கவசம் இருப்பது போல் அமைதி நிலவுகிறது. அதுதான் இந்தியா முதலீடு செய்துள்ள சாபஹார் துறைமுகம். பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் செல்ல வழி இல்லாததால், இந்தியா பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்து ஈரானின் இந்தத் துறைமுகத்தை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தத் துறைமுகத்திற்கு மிக அருகிலேயே விழுந்தன. இருப்பினும், இந்தியா நிர்வகிக்கும் ‘ஷாஹித் பெஹெஷ்டி’ முனையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; அங்கிருந்து வர்த்தகம் தடையின்றி நடந்து வருகிறது. இந்தியாவுடன் இருக்கும் நெருக்கமான நட்பு காரணமாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே இந்தியாவின் முதலீடுகள் உள்ள இடத்தைத் தாக்காமல் மிகவும் கவனமாக இருக்கின்றன.
அதே சமயம், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியாவை ஒரு முக்கிய கூட்டாளியாகப் பார்ப்பதால், அமெரிக்காவும் இந்தத் துறைமுக விஷயத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறது.
