சமீபத்தில் நடைபெற்ற ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்பட விழாவில் உலக அரசியல் குறித்துத் தனது பாணியில் ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைக் குறிப்பிட்ட அவர், ஏ.ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற “முஸ்தபா முஸ்தபா” பாடலைப் பாடி இரு நாடுகளும் நண்பர்களாக ஒன்று சேர வேண்டும் என்று வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டார்.
மேலும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உன்னால் முடியும்” என்ற அந்தப் பாடலின் வரிகளைப் போல, உலக நாடுகளும் பகையை மறந்து நட்புடன் இருக்க வேண்டும் என்பதே அவரது பேச்சின் உட்பொருளாக அமைந்தது. அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் சீரியஸான உலகப் போர் அபாயத்தையே தனது டைமிங் காமெடியால் சிரிப்பலையாக மாற்றிய சதீஷின் அணுகுமுறையை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். வெறும் நகைச்சுவைக்காக மட்டுமின்றி, போர் இல்லாத அமைதியான உலகம் வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘முஸ்தபா முஸ்தபா’ என்றாலே அது நட்பின் அடையாளம் என்பதால், அந்தத் தலைப்பிலேயே உருவாகியுள்ள படக்குழுவினருக்கும் இந்தப் பேச்சு ஒரு நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது.
