ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 27 அன்று ஒகாவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள நிசாரா மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகில் சபாரி சுற்றுலா மேற்கொண்டனர். அப்போது அவர்கள் குழந்தை யானைகளை கண்டு ரசித்து கொண்டிருந்த வேளையில், திடீரென ஒரு தாய் யானை ஆவேசமாக கர்ஜித்து அவர்களை நோக்கி விரைந்தது.

“>

 

சுற்றுலா வழிகாட்டிகள் படகுகளை வேகமாக நகர்த்தியிருந்தாலும், அந்த யானை தொடர்ந்து பின்தொடர்ந்து தாக்கியது. இதில் ஒரு பெண் சுற்றுலாப் பயணி நீரில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் கைபேசிகள், கேமராக்கள் உள்ளிட்ட மின்சாதனங்கள் சேதமடைந்ததாக சபாரி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, சுற்றுலா பயணிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.