கோவையில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணியிலுள்ள கட்சி வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு எம்.பி.க்களாக செல்வர். மற்ற கட்சிகள் இரும்பு கடைக்கு செல்லும் என்று தெரிவித்தார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில், அண்ணாமலை ஒரு ரெடிமேட் அரசியல்வாதி. பாஜக தலைவர் பதவிக்கு ஆள் இல்லை என்பதால் ரெடிமேடாக அவரை தலைவர் ஆக்கினர். அதனால் அவர் ரெடிமேட் டயலாக் தான் பேசுவார். அவருக்கு தெரிந்ததெல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம், இரும்பு கடை என்பதுதான் என்று தெரிவித்தார். .