இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக வெளியான ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், அவர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும், தற்போது வருவது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும் குழப்பம் நிலவியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு உணவகத்தில் காபி அருந்தியபடி தனது இரு கைகளையும் கேமரா முன் காட்டிய நெதன்யாகு, “எனது விரல்களை எண்ணிப் பாருங்கள், எல்லாம் சரியாக இருக்கின்றன” என்று கிண்டலாகப் பேசி தான் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேல் மக்களுக்கு இந்த வீடியோ மூலம் அவர் ஊக்கமளித்துள்ளார். “நாங்கள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்; சில ரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்ட அவர், மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
“>
தனது உடல்நிலை குறித்த வதந்திகளைப் பகடி செய்யும் விதமாக, “நான் காபிக்காக இறக்கிறேன்” என்ற ஹீப்ரு மொழிச் சொற்றொடரைப் பயன்படுத்தி நகைச்சுவையாகப் பேசியுள்ள இந்த வீடியோ, தற்போது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
