கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த யானை கேரள பகுதியில் பல்வேறு நபர்களை காயப்படுத்தி இருக்கிறது. மேலும் யானை தாக்கி பெரும்பாலானோர் உயிரிழந்து உள்ளனர்.

இப்போது சுற்றித் திரியும் அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தால் தேனி மற்றும் கம்பம் நகர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்கு வனத்துறையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த அரிசி கொம்பன் யானை மின்வாரிய அலுவலகம் அருகில் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வனத்துறை தடைவிதித்துள்ளது.