சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் 52 ரன்களை விளாசித் தள்ளிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங், கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த அசத்தலான ஆட்டத்தைக் கண்டு வியந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், பிசிசிஐ-க்கு ஒரு முக்கியப் பரிந்துரையை விடுத்துள்ளார்.

சூர்யவன்ஷியை விரைவாக இந்திய அணியில் தேர்வு செய்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ​மூத்த வீரர்களுடன் சேர்ந்து விளையாடும்போதுதான் சூர்யவன்ஷிக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கிடைக்கும் என்றும், இந்த இளம் திறமையை வீணாக்கக் கூடாது என்றும் மைக்கேல் வான் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது அதிரடி ஆட்டமும், மைக்கேல் வானின் ஆதரவும் தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.