சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது. சில சிறுமிகள் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த ஒரு இளைஞர் அவர்களைக் கடந்து செல்லும்போது, ஒரு சிறுமியிடம் மிகவும் அநாகரீகமான முறையில் தவறான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். யாரும் பார்க்கவில்லை என அந்த இளைஞர் நினைத்தாலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அவரது முகம் உட்பட அனைத்து அத்துமீறல்களும் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
⚠️ Attention: Caught on CCTV: Share this photo/video as much as possible and help to capture this animal, he is seen expl0it!ng minor g!rls in the street.
His act was caught on CCTV in a similar incident in Nihal Vihar.
The next girl or daughter should not be his prey! pic.twitter.com/EY4u2JNYYv
— Aparajite (@amshilparaghu) April 6, 2026
இந்தக் கொடூரமான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இவ்வளவு மோசமாகவா இருக்கிறது?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், வீடியோவில் சிக்கிய அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
