பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இந்தியாவின் தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகிறது. ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் விளையாட வேண்டும். சென்னை சேப்பாக்கத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் விராட் கோலி மற்றும் படிதாரை அமைதியாக்கிவிட்டால் சிஎஸ்கே ஜெயிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிலௌமிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி விராட் கோலியையும், படிதாரையும் அமைதியாக்கிவிட்டால் சிஎஸ்கே ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டு விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது. விராட் கோலி தவிர இந்த முறை அவர்கள் பலமான வீரர்களை சேர்த்துள்ளார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியுமே இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.