தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ ரயிலில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற்ற வன்முறையான சம்பவம், இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாம்சுய்–ஷினி பாதையில் (சிவப்பு கோடு) பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், ஒரு இளம்பெண்ணுக்கும் 73 வயது மூதாட்டிக்கும் இடையில் ‘ இருக்கை’ காரணமாக ஏற்பட்ட தகராறு,  WWE மல்யுத்தத்தில் காணப்படும் ‘டிராப் கிக்’ தாக்குதலாக மாறியது.

Elderly woman harasses another lady and faces consequences
byu/vamken inPublicFreakout

அதாவது மூதாட்டி முன்னுரிமை இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம், அந்த இருக்கையை காலி செய்யுமாறு கேட்டிருக்கிறார். இதற்கு எதிராக இருவரும் கடுமையான வாய்த்தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் தாக்குதலாகவும், பின்னர் உடல் ரீதியான வன்முறையாகவும் மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், இளம்பெண் திடீரென மூதாட்டியை வலுவாக ‘உதைத்து’, அவரை தரையில் விழுமாறு செய்தார். சம்பவ இடம் ஜின்யே அன்ஹே மெட்ரோ நிலையம் எனத் தைபே மாஸ் ரேபிட் டிரான்சிட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

மேலும் சம்பவத்துக்குப் பிறகு, மெட்ரோ நிலைய மேலாளர் உடனடியாக ரயிலில் ஏறி நிலைமையை கட்டுப்படுத்தினார். இந்த வன்முறை ரயில் சேவைகளை பாதிக்கவில்லை என்றும்,  விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.