மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவம், தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான அய்யான் அகமது மற்றும் உஜைர் கான் ஆகிய இருவரும், “யார் அதிக பெண்களை வசியப்படுத்தி ஏமாற்றுவது?” என்பதில் தங்களுக்குள் ஒரு கொடூரமான போட்டியையே நடத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அய்யான் அகமது தனது தந்தையின் கார்களைப் பயன்படுத்தி ஆடம்பரமாகக் காட்டி சமூக வலைதளங்களில் பெண்களை வீழ்த்தியுள்ளார். தான் ஏமாற்றும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து உஜைர் கானுக்கு அனுப்பி பெருமை பேசி வந்துள்ளான்.
இறுதியில், இவர்களுக்குள் ஏற்பட்ட பணத்தகராறால் ஆத்திரமடைந்த உஜைர் கான், அய்யான் அனுப்பிய அனைத்து ஆபாச வீடியோக்களையும் இணையத்தில் கசியவிட்டதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுவரை 8 பெண்கள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 வீடியோக்கள் மற்றும் 39 புகைப்படங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அமராவதி நகரில் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பிளாட் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மிருகத்தனமான’ செயலில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
