கடந்த 2013 ஆம் ஆண்டு நவராத்திரி அஷ்டமி நாளன்று பிஜி ரயில்வே நிலையத்திற்கு செல்லும் வழியில் மன்ப்ரீத் கௌர் என்ற இளம் பெண் கடத்தப்பட்டார். அந்த சமயத்தில் தனக்கு நடந்த பயங்கர அனுபவம் குறித்து தற்போது அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில் அது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பெண் நடந்து செல்லும் போது ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை கடத்தியதோடு கிட்டத்தட்ட 45 முறை தான் வைத்திருந்த ஆயுதத்தால் அந்த பெண்ணை வயிற்றில் குத்தினார். இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அந்த ஆட்டோ ஓட்டுனர் அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Humans_of_equality (@we_the_humans_of_equality)

அதாவது அந்த பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதற்காக அவர் கடத்தியதாக கூறப்படும் நிலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அந்த பெண் சில தூரம்  வலியோடு நடந்து சென்றார். அப்போது ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் உதவி செய்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை முடிந்த பிறகு போலீசாருக்கு குற்றவாளியின் ஸ்கெட்ச் வரைந்து உதவினார். தொடர்ந்து மறுநாளே அந்த குற்றவாளியை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. மேலும் இந்த செய்தியை தற்போது அவர் instagram பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகிறார்கள்.